Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, July 12, 2019

வரலாற்றில் இன்று 12.07.2019

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
சூலை 12 (July 12) கிரிகோரியன் ஆண்டின் 193 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 194 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 172 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1641 – போர்த்துக்கல்லுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
1690 – இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியமின் படைகள் போயின் என்ற இடத்தில் இரண்டாம் ஜேம்சின் படைகளை வென்றனர்.
1691 – இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியமின் படைகள் அயர்லாந்தில் ஓகிறிம் என்ற இடத்தில் பெரும் வெற்றி பெற்றனர்.
1799 – ரஞ்சித் சிங் லாகூரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பஞ்சாபின் ஆட்சியைப் பிடித்தான்.
1806 – 16 ஜெர்மன் மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர்.
1892 – மொண்ட் பிளாங்க்கில் ஏரி ஒன்று பெருக்கெடுத்ததில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
1898 – செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.


1918 – ஜப்பானின் “கவாச்சி” என்ற போர்க்கப்பல் ஹொன்ஷூவில் மூழ்கடிக்கப்பட்டதில் 621 பேர் கொல்லப்பட்டனர்.
1932 – நோர்வே வடக்கு கிறீன்லாந்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது.
1975 – சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.
1979 – கிரிபட்டி பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1993 – ஜப்பானில் 7.8 அளவு நிலநடுக்கம், மற்றும் சுனாமி தாக்கியதில் 202 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – இஸ்ரேலிய இராணுவத்தினர் இருவரை ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கடத்தினர். இதனை அடுத்து இஸ்ரேல் லெபனான் மீது தாக்கியதில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். போர் ஆகஸ்ட் 14 இல் முடிவுக்கு வந்தது.
2007 – வவுனியாவில் இலங்கை வான்படையின் கிபீர் வானூர்தியை விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தினர்.

பிறப்புகள்

1730 – சோசியா வெட்ச்வூட், ஆங்கிலேய மட்பாண்ட உற்பத்தியாளர் (இ. 1795)
1813 – கிளவுட் பெர்னாட், பிரெஞ்சு உடலியங்கியலாளர் (இ. 1878)
1817 – கென்றி டேவிட் தூரோ, அமெரிக்க மெய்யியலாளர், எழுத்தாளர் (இ. 1862)
1854 – ஜோர்ஜ் ஈஸ்ற்மன், ஈஸ்ட்மேன் கோடாக் நிறுவனர் (இ. 1933)


1895 – பக்மினிசிட்டர் ஃபுல்லர், அமெரிக்கக் கட்டிடக் கலைஞர் (இ. 1983)
1904 – பாப்லோ நெருடா, நோபல் பரிசு பெற்ற சிலிய எழுத்தாளர் (இ. 1973)
1909 – குஞ்சிதம் குருசாமி, திராவிட இயக்கத்தில் ஈடுபட்ட ஒரு பெண் செயற்பாட்டாளர் (இ. 1961)
1935 – சத்தோசி ஓமுரா, நோபல் பரிசு பெற்ற சப்பானிய மருத்துவர்
1952 – எசாம் சரஃப், எகிப்திய அரசியல்வாதி
1960 – ஏர்ல் குணசேகர, இலங்கை அரசியல்வாதி
1961 – சிவ ராஜ்குமார், இந்திய நைகர், பாடகர்
1965 – சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இந்தியத் துடுப்பாளர்
1978 – மிச்செல் ரோட்ரிக்வெஸ், அமெரிக்க நடிகை
1991 – ஜேம்சு ரொட்ரீகசு, கொலம்பிய கால்பந்து வீரர்
1997 – மலாலா யூசப்சையி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாக்கித்தானியர்



இறப்புகள்

1804 – அலெக்சாண்டர் ஆமில்டன், அமெரிக்க அரசியல்வாதி (பி. 1755)
2006 – உமர் தம்பி, தமிழ் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கியவர் (பி. 1953)
2012 – மா. ஆண்டோ பீட்டர், தமிழக எழுத்தாளர், மென்பொருள் உருவாக்குனர் (பி. 1967)
2012 – மணி கிருஷ்ணசுவாமி, கருநாடக வாய்ப்பாட்டு கலைஞர் (பி. 1930)
2012 – அலிமுத்தீன், பாக்கித்தானியத் துடுப்பாளர் (பி. 1930)
2013 – பிரான், இந்திய நடிகர் (பி. 1920)
2013 – அமர் கோ. போசு, அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1929)

சிறப்பு நாள்

விடுதலை நாள் (கிரிபட்டி 1979).
விடுதலை நாள் (சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 1975).

Popular Feed

Recent Story

Featured News