Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 2, 2019

ஜூலை 4-ல் வேலைவாய்ப்பு முகாம்


வேலைவாய்ப்புத் துறை ஆணையர் பா.ஜோதிநிர்மலா சாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் வரும் ஜூலை 4-ம் தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை, மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையம், ஏ-28, முதல் தளம், டான்சி கார்ப்பரேட் வளாகம், திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-600032' என்ற முகவரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.
இந்த முகாமில் 20-க் கும் மேற்பட்ட தனியார்த்துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன.


பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, செவிலியர் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ள 21 வயது முதல் 40 வயதுவரை உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
முகாமில் பங்கேற்க முன்பதிவு அவசியம் இல்லை.
இதற்கான பயணப்படி ஏதும் வழங்கப்படாது. மேலும் விவரங் களுக்கு தொழில் நெறி வழிகாட் டும் மையத்தை நேரிலோ, தொலை பேசி 044-22500134 வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.