Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 23, 2019

7500 ஸ்மார்ட்' வகுப்பறைகள்


''செப்டம்பர் மாதத்திற்குள், 7,500 பள்ளிகளில், 'ஸ்மார்ட் வகுப்பறைகள்' துவக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை, ராயபுரத்தில், மாணவ - மாணவியருக்கு, இலவச, 'லேப்டாப்' வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 12 பள்ளிகளை சேர்ந்த, 3,491 மாணவ - மாணவியருக்கு, லேப்டாப்கள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:மத்திய அரசின், எந்த தேர்வுகளாக இருந்தாலும், அதை எதிர்கொள்ளும் வகையில், பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு, செருப்பு அணிந்து செல்லும், அரசு பள்ளி மாணவர்கள், அடுத்த ஆண்டு முதல், 'ஷூ' அணிந்து செல்வர். 7,500 பள்ளிகளில், செப்டம்பர் இறுதிக்குள், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் துவக்கப்படும்.மாணவர்கள், 70 லட்சம் பேருக்கு, அடுத்த மாதம், 15ம் தேதிக்குள், 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும். பிளஸ் 2 முடித்தவுடன், மாணவர்களுக்கு, பட்டய கணக்காளர் தேர்வு எழுத பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது, 20 ஆயிரம் பேருக்கு, பயிற்சி தரப்பட்டுள்ளது.புதிய கல்வி கொள்கையில், இரு மொழி கொள்கை தான், அரசின் லட்சியமாக இருக்கிறது. மதிப்பெண் அடிப்படையில், சென்ற ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு கூடுதலாக, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இவ்வாறு, அவர் பேசினார்.