
Eye Care Tips :
கண்களை சிரமப்படுத்திக் குறைவான வெளிச்சத்தில் இல்லாமல், போதிய வெளிச்சத்தில் தான் படிக்கவும், எழுதவும் செய்ய வேண்டும்.
கண்களில் தூசி விழுந்தால் கைகளால் கசக்காமல், தண்ணீரைக் கொண்டுதான் சுத்தம் செய்ய வேண்டும்.
கண்ணுக்கு அதிகம் வேலை கொடுக்கும் சமயங்களில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும், இடையில், ஐந்து நிமிடம், உள்ளங்கையால், இரு கண்ணையும் மூடியபடி அமர்ந்து, கண்ணுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
கண்களுக்கும், கண்பார்வைக்கும் பலம் கொடுக்கின்ற பால், முட்டை, கீரை, மீன், பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
கணினி மற்றும் டி. வி. யை பயன்படுத்துவோர், அடிக்கடி கண்களை மூடியும், சிமிட்டவும் செய்ய வேண்டும்.
உங்கள் தொலைக்காட்சியின் செங்குத்தான உயர அளவு 10 அங்குலம் இருந்தால் நீங்கள் 10 அடி தொலைவில் இருந்து டி. வி. பாருங்கள்.
40 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் கண்களை பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது.


