Join THAMIZHKADAL WhatsApp Groups

தமிழ்நாடு வனத்துறையில் வனக்காவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக்குழுமம் வெளியிட்டுள்ளது. இதற்குதகுதி வாய்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பணிகள்:
வனக்காவலர்
மொத்தம் = 564 காலியிடங்கள்
முக்கிய தேதிகள்:
அறிவிப்பு நாள்: 07.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 20.07.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.08.2019
ஆன்லைன் வழியில் தேர்வுக் கட்டணம் செலுத்தக் கடைசி நாள்: 10.08.2019, மாலை 05.00 மணி
இந்தியன் வங்கி மூலம் தேர்வுக் கட்டணம் செலுத்தக் கடைசி நாள்: 1 2.08.2019, மதியம் 02.00 மணி
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய கடைசி நாள்: 12.08.2019
வயது வரம்பு: (01.07.2019 அன்றுக்குள்)
1. பொது பிரிவினராக இருந்தால், குறைந்தபட்சமாக 21 வயது முதல் அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும். 2. எஸ்.சி / எஸ்.டி / பி.சி / எம்.பி.சி பிரிவினர், ஆதரவற்ற விதவைகள் போன்றோராக இருந்தால், குறைந்தபட்சமாக 21 வயது முதல் அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
3. முன்னாள் ராணுவத்தினராக இருந்தால், குறைந்தபட்சமாக 21 வயது முதல் அதிகபட்சமாக 30 வயதுக்குள் (இராணுவப்பணி கழித்தது போக) இருத்தல் வேண்டும்.
ஊதியம்:
குறைந்தபட்சமாக ரூ.16,600 முதல் அதிகபட்சமாக ரூ.52,400 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வுக்கட்டணம்: ரூ.150
குறிப்பு:
ஆன்லைன் மூலமும், இந்தியன் வங்கியின் சல்லான் மூலமும் தேர்வுக்கட்டணத்தை செலுத்தலாம்.
கல்வித்தகுதி:
வனக்காவலர் பணிக்கு, குறைந்தபட்ச பொதுக் கல்வித்தகுதி அதாவது பத்தாம் வகுப்புஅல்லது அதற்கிணையான கல்வித்தகுதியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப் பள்ளிக்கல்வி அல்லது கல்லூரிக்கல்வி படிப்பில் சேர்வதற்கான தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் தமிழ்நாடு வனத்துறையின் இணையதளமான,
https://www.forests.tn.gov.in/ மற்றும் https://tnfusrc.in/drfwmay19/ - போன்ற இணையதள முகவரிகளில் ஏதேனும் ஒன்றில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
தேர்வு செய்யும் முறை:
1. ஆன்லைன் வழித்தேர்வு
2. உடற்தகுதி தேர்வு
3. உடற்திறன் தேர்வு
குறிப்பு: ஆன்லைன் வழித்தேர்வு வினாத்தாள்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.
மேலும், இது குறித்த முழுத்தகவல்களைப் பெற,
https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FW-2019/Press%20Release-er_Tamil.pdf மற்றும் https://tnfusrc.in/drfwmay19/uploads/loadpdf.php?file=k7m5p+fQk8y6wOLgwuKWo5jWzst9tN/FppyXow==&t=0rjFodnKx8m8w9rhj9nJ0A==#toolbar=0&navpanes=0- என்ற இணையதள முகவரிகளில் சென்று தெரிந்து கொள்ளலாம்.