Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 22, 2019

புதிய கல்வி கொள்கை பற்றி நான் பேசினால்தான் மோடிக்கு கேட்குமா?: ரஜினிகாந்த் கேள்வி



புதிய கல்வி கொள்கை பற்றி நான் பேசினால்தான் பிரதமர் மோடிக்கு கேட்குமா?’ என்று நடிகர் ரஜினிகாந்த் கேட்டார்

கே..வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா நடித்துள்ள படம் காப்பான்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. அப்போது ரஜினிகாந்த் பேசியதாவது



நேருக்கு நேர்’ படத்தை பார்த்தபோது, சூர்யா எப்படி ஒரு நடிகராக முடியும் என்று சந்தேகப்பட்டேன். இப்போது அவர் நல்ல நடிகராகிவிட்டார். புதிய கல்வி கொள்கை பற்றி சூர்யா எழுப்பிய கேள்விகளை நான் வரவேற்கிறேன். அவர் சொன்ன விஷயங்களை சர்ச்சைக்குள்ளாக்கி விட்டனர் என்றாலும், விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

மாணவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்ததால் இப்படி சொல்லியிருக்கிறார். இதுபற்றி நான் பேசினால்தான் பிரதமர் மோடிக்கு கேட்கும் என்று பலர் சொன்னார்கள். சூர்யா பேசியது கூட மோடிக்கு கேட்டுவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.