ஆண்டுதோறும் ஆயிரம் கோடி ஒதுக்கி இலவச லேப்டாப் வழங்கி வரும் இந்த அரசு, அரசுப்பள்ளி கணினி ஆய்வகத்தை வைத்திருக்கும் லட்சணம் இதுதான். கணினி பாடத்திட்டத்தை மாற்றியபோதிலும், பாடத்தில் கற்றுதரப்படும் சாப்ட்வேர்களை, தூசிதட்டிய கணினியில் (2005ம் ஆண்டு கொடுக்கப்பட்டது) பதிவேற்ற முடியாத நிலை உள்ளது. ஏழை மாணவர்களுக்கு எப்படி தரமான கல்வி வழங்க முடியும். பின்னர் ஏன் மாணவர் சேர்க்கை பள்ளியில் குறையாது? கல்வியில் இந்த நாடே திரும்பி பார்க்கும் என அடிக்கடி கூறும் கல்வி அமைச்சரின் பதில் என்ன?




