Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, July 6, 2019

பட்டியலில் உள்ள அனைவருக்கும் பணிநிரவலா? - விளக்கம்


அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே
தற்போது மாநில அளவில் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு நிரவல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் உள்ள அனைவருக்கும் பணிநிரவல் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
பணிநிரவல் மாவட்டத்தில் உள்ள காலிப் பணி இடங்களுக்கு மட்டுமே நடைபெற உள்ளது.
உதாரணமாக திருச்சி மாவட்டத்தில் தமிழ் 4 ஆங்கிலம் 13 கணிதம் 4 ஆகிய இடங்கள் மட்டுமே காலியாக உள்ளது.
இந்த இடங்களுக்கு மட்டுமே பணிநிரவல் நடைபெறும்.


இந்த பட்டியலில் உள்ள இளையோருக்கு பணி நிரவல் செய்யப்படுவர்.
மற்றவர்களெல்லாம் அதே பள்ளியில் தொடர்ந்து பணிபுரிந்து வருவீர் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
பிற மாவட்டத்திற்கு பணிநிரவல் செய்யப்பட மாட்டீர்கள் காரணம் அனைத்து மாவட்டத்திலுமே பணி நிரவல் பணியிடங்கள் உள்ளது.
எனவே பணிநிரவல் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம்.