Join THAMIZHKADAL WhatsApp Groups

புடலங்காய்த் துவையல்
தேவையான பொருட்கள்
புடலங்காய் - 200 கிராம்
துவரம்பருப்பு - 50 கிராம்
உளுந்தம் பருப்பு - 25 கிராம்
மிளகு - 10 கிராம்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - தேவையான அளவு
செய்முறை : முதலில் புடலங்காயை நன்றாக கழுவி சிறிதாக நறுக்கி ஒரு வாணலியில் போட்டு சிறிது எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். பின்னர் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகு, லேசாக வறுத்து வதக்கிய புடலங்காயுடன் பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதுடன் சிறிது தண்ணீர், உப்பு, சேர்த்து கெட்டியாகும் வரை நன்கு வதக்கவும். பின்னர் கடுகு சேர்த்து தாளித்து இறக்கி வைக்கவும்.
பயன்கள் : இந்த புடலங்காய்த் துவையலை உஷ்ண வியாதிகள் உள்ளவர்கள் மற்றும் குடற் புண் உள்ளவர்கள் தினமும் அவர்கள் உண்ணும் உணவுடன் துணை உணவாக எடுத்துக் கொண்டால் நன்கு பலனைக் கொடுக்கும். மேலும் இந்தத் துவையலை சப்பாத்தி மற்றும் ரொட்டி ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.
இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.