Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, July 12, 2019

ஓராண்டுக்குள் ஓய்வுபெற இருக்கும் பேராசிரியர்களுக்கு ஆராய்ச்சி உதவித் திட்டம்: யுஜிசி அறிவிப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தரமான அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஓராண்டுக்குள் ஓய்வுபெற இருக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை பேராசிரியர்களுக்கான ஆராய்ச்சி உதவித் திட்டத்தை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் படி, மாநில பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் பணிபுரிந்து ஓராண்டுக்குள் ஓய்வு பெறும், ஆராய்ச்சியில் சிறந்து விளங்கிய பேராசிரியர்களுக்கு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த ஆராய்ச்சி உதவித் தொகை வழங்கப்படும். இந்த மூன்று ஆண்டுகளும் மாதம் ரூ. 50,000 நிதியுதவி அளிக்கப்படுவதோடு, ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் ஆராய்ச்சி நிதியுதவியும் வழங்கப்பட உள்ளது. இதனால், அவர்களின் ஓய்வூதியம் மற்றும் பிற ஓய்வூதியப் பலன்களில் எந்தவித மாற்றமோ அல்லது குறைப்போ செய்யப்படாது எனவும் யுஜிசி அறிவித்துள்ளது.


தகுதி என்ன: இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் பேராசிரியர்கள், பல்கலைக் கழகத்தின் அறிவியல் அல்லது தொழில்நுட்பத் துறைகளில் பேராசிரியர் அல்லது இணைப் பேராசிரியர் அல்லது ரீடர் அளவில் பணியாற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஆராய்ச்சி வலைதளங்களில் வெளியிட்டிருக்கும் ஆராய்ச்சி கட்டுரைகள் குறைந்தபட்சம் 50 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் குறியீட்டை பெற்றிருக்க வேண்டும். அடிப்படை அறிவியல் துறையின் கீழ் 15 முழுநேர ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டும்.


பொறியியல் தொழில்நுட்ப துறையாக இருந்தால் 10 முழு நேர ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டும். அத்துடன், அவர்களில் குறைந்தபட்சம் 5 பேராவது 10 ஆண்டுகளில் பிஎச்.டி. முடித்து பட்டம் வாங்கியிருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 3 ஆராய்ச்சித் திட்டங்களைக் கையாண்டிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை யுஜிசி விதித்துள்ளது.

Popular Feed

Recent Story

Featured News