Join THAMIZHKADAL WhatsApp Groups
செயற்கைகோள் வேண்டாம் சேமிப்பு போதும்
(செந்துறை)
சாலை ஓரம் மரங்களை நட்டுவை
சாமி பேரைச் சொல்லி அதை விட்டுவை
நல்ல விலை என்று சொல்லி வெட்டிடாதே
நல்ல உந்தன் வாழ்வில் கொல்லி வைத்திடாதே
பெற்ற பிள்ளை போல நீயும் மரம்வளர்த்தால்
பெற்றெ டுத்து காப்ப துபோல உனைக்காக்கும்
நமக்கென்ன என்று எண்ணி இருந்திடாதே
நமதுயிரும் போகு மென்று மறந்திடாதே
வெண்ணிலாவில் தண்ணீரை ஆய்வு செய்ய
மண்ணுலகில் செயற்கைக்கோள் ஏவு கின்றோம்
மண்ணுலக மழைநீரை சேக ரிக்கும்
நன்முறையை செயல்படுத்தி காத்தால் போதும்
-
இரட்டணை நாராயண கவி