Join THAMIZHKADAL WhatsApp Groups

கிராமங்களில் உள்ள, அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான, ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம். நகராட்சி, மாநகராட்சிகளில் படிக்கும் மாணவர்கள், விண்ணப்பிக்கமுடியாது.
வரும், 25ம் தேதிக்குள், தலைமை ஆசிரியர் மூலம், விண்ணப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.பெற்றோரின் ஆண்டு வருமானம், 1 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும், தலா, 50 மாணவர்கள், 50 மாணவியர் தேர்வு செய்யப்படுகின்றனர். பிளஸ் 2 படிக்கும் வரை, ஆண்டுக்கு, 1,000 ரூபாய், கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.