Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, July 6, 2019

எம்.பி.பி.எஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு!





தமிழகத்தில் உள்ள எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்இன்று வெளியிட்டார்.

தமிழகத்தில் 23 அரசு கல்லூரிகளில் 3250 எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர்வதற்கு சுமார் 60 ஆயிரம் பேர் விண்ணப்பத்துள்ளனர். இந்த மருத்துவப்படிப்புகளுக்கான தரவரிசைபட்டியல் இன்று வெளியானது.



சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்இதனை வெளியிட்டார். நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ருதி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவர்கள் www.tnhealth.org என்ற இணையதளத்தில் தரவரிசை பட்டியலைதெரிந்துக்கொள்ளலாம்.

மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 8ஆம் தேதி தொடங்குகிறது.