Join THAMIZHKADAL WhatsApp Groups

பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடியதும், கேள்வி-நேரம் எடுத்துக்கொள்ளப்படும். இதை தொடர்ந்து நேரம் இல்லா நேரத்தில் எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்னைகள் குறித்து கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடத்துவார்கள்.
தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, உயர் கல்வி துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். விவாதம் முடிந்ததும், பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் பதில் அளித்து துறை சார்பில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.