Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 17, 2019

எம்பிபிஎஸ் நிர்வாக ஒதுக்கீட்டு கலந்தாய்வு நிறைவு


எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்பப்படும் 463 எம்பிபிஎஸ் இடங்கள், 665 பிடிஎஸ் இடங்கள் ஆகியவற்றுக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இதில் ஒரே நாளில், மொத்தம் 374 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதையடுத்து, தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான பிடிஎஸ் இடங்களுக்கு புதன்கிழமை முதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதற்காக 1,815 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரக வட்டாரங்கள் தெரிவித்தன. வரும் 19-ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.