Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, August 8, 2019

சிபிஎஸ்இ: 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பரில் செய்முறைத் தேர்வு


சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
மத்திய பள்ளிக் கல்வி வாரிய பாடத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் நடத்தப்படும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில் நிகழ் கல்வியாண்டில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வுக்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
கடந்த ஆண்டில் அறிவித்தபடி தொழிற்கல்வி பிரிவினருக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி மாதமும், பொதுப் பாடங்களுக்கான தேர்வுகள் மார்ச் மாதமும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தநிலையில் நிகழ் கல்வி ஆண்டுக்கான தேர்வுகள் தொடங்குவதற்கு முன்னதாக, செய்முறை உள்ள பாடங்களுக்கு செய்முறைத் தேர்வுகளை டிசம்பர் மாதம் நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. அதேபோன்று தொழிற்கல்விக்கான தேர்வுகளை பிப்ரவரி மாதம் 15}ஆம் தேதி தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
செய்முறைத் தேர்வுகள், பொதுத் தேர்வுக்கான அட்டவணைகள் நவம்பர் மாதத்தில் வெளியிடவும் சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.