Breaking

Friday, August 30, 2019

ஐ.ஏ.எஸ்., இலவச பயிற்சி: அக்.,13ல் நுழைவு தேர்வு



சென்னை: ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுக்கான, இலவச பயிற்சி வகுப்பில் சேர, அக்., 13ல் நுழைவு தேர்வு நடக்க உள்ளது.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற, அகில இந்திய குடிமை பணிகளில் சேர, மத்திய தேர்வாணைய குழு, முதல் நிலை தேர்வுகளை, 2020 மே, 31ல் நடத்த உள்ளது. இதில் வெற்றி பெற, தமிழகத்தை சேர்ந்த பட்டதாரி, முதுநிலை பட்டதாரிகளுக்கு, தமிழக அரசு கட்டணமின்றி, ஆறு மாத பயிற்சி அளிக்க உள்ளது.

தங்குமிடம், உணவும் வழங்கப்படும்.சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள, அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில், பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கான நுழைவு தேர்வு, அக்., 13ல், 20 மையங்களில் நடக்க உள்ளது. விருப்பம் உள்ள இளைஞர்கள், இதில் பங்கேற்கலாம். இதற்கு, www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில், செப்., 16க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment