Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, August 9, 2019

ஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறும். விதிகளில் திருத்தம் செய்யவும் கல்வித்துறை முடிவு என தகவல்


விதிமுறைகளில் திருத்தம் செய்து, ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை செப்டம்பர் இறுதியில் நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வியின்கீழ் 37,211 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 2.6 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஆசிரியர்கள் பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறுவது வழக்கம். ஆனால், மக்களவைத் தேர்தலால் நடப்பு கல்வியாண்டில் கலந்தாய்வு நடைபெறுவது தாமதமானது. - இந்நிலையில் ஆசிரியர் இட மாறுதல் கலந்தாய்வு இணைய தளம் வழியாக ஜூலை 8 முதல் 15-ம் தேதி வரை நடத்தப்படும் என கல்வித் துறை அறிவித்தது.

இதற்கிடையே ஒரே பள்ளியில்குறைந்தது 3 ஆண்டுகள் பணி புரிந்தவர்களுக்கு மட்டுமே இட மாறுதல் தரப்படும் என்ற கலந் தாய்வு விதியை தளர்த்தக் கோரி நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போதுகலந்தாய்வை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம்உத்தர விட்டது. இதையேற்று அனைத்து வித கலந்தாய்வுப் பணிகளையும் பள்ளிக்கல்வித்துறை நிறுத்திவைத் தது. இந்நிலையில் விதிகளில் திருத்தம் செய்து கலந்தாய்வு நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வி அதி காரிகள் கூறும்போது, "ஏற் கெனவே பொது மாறுதல் கலந் தாய்வுக்குரிய வழிகாட்டுதல் நெறி முறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் சில மாற்றங்கள் செய்து கலந்தாய்வை செப்டம்பர் இறுதி யில் நடத்த முடிவு செய்துள்ளோம். அதன்படி ஒரே பள்ளியில் 3 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற விதிமுறை தளர்த்தப்படும். இதன்மூலம் உயர் நீதிமன்ற வழக்குகளும் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்” என்றனர்.