Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, September 19, 2019

பிளஸ் 1, பிளஸ் 2 பாட தொகுப்புகளில் மாற்றம்



தமிழக பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ள அரசாணை:பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாட தொகுப்புகளில், மாற்றம் செய்யப்படுகிறது. இந்த மாற்றம், 2020 - 21ம் கல்வி ஆண்டில் அமலுக்கு வரும். மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய நிர்வாக குழுவின் அறிக்கை மற்றும் அரசு தேர்வுகள் இயக்குனரின் பரிந்துரையின் படி, இந்த முடிவு எடுக்கப்பட்டது.மொழி பாடம், ஆங்கிலம் தவிர, மூன்று முதன்மை பாட தொகுப்பு, 500 மதிப்பெண்களுக்கும், நான்கு முதன்மை பாட தொகுப்பு, 600 மதிப்பெண்களுக்கும் நடத்தப்படும். இதில், எதை வேண்டுமானாலும், மாணவர்கள் தேர்வு செய்யலாம். தற்போது பிளஸ் 1 படிப்பவர்கள் அடுத்த கல்வியாண்டில் இப்போது படிக்கும் பாட தொகுப்பில் பிளஸ் 2வை தொடரலாம். இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.புதிய அரசாணையின் படி,கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் இணைந்த முதலாம் பாடப்பிரிவு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. அறிவியல் மட்டும் உள்ள இரண்டாம் பாடப்பிரிவில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


மாற்றம் செய்யப்பட்டுள்ள பாட தொகுப்புகள்:

பொது அறிவியல் பிரிவு

  • கணிதம், இயற்பியல், வேதியியல்
  • இயற்பியல், வேதியியல், உயிரியல்
  • கணிதம், இயற்பியல், கணினி அறிவியல்
  • வேதியியல், உயிரியல், மனை அறிவியல்கலை பிரிவு
  • வரலாறு, புவியியல், பொருளியல்
  • பொருளியல், வணிகவியல், கணக்கு பதிவியல்
  • வணிகவியல், வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், கணக்கு பதிவியல்
  • வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல்



முன்னேறிய தமிழ், வரலாறு, பொருளியல்தொழிற்கல்வி பிரிவு*
  • கணிதம், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
  • கணிதம், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
  • கணிதம், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
  • கணிதம், சிவில் இன்ஜினியரிங்
  • கணிதம், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்
  • கணிதம், டெக்ஸ்டைல் தொழில்நுட்பம்
  • உயிரியல், நர்சிங்
  • மனை அறிவியல், டெக்ஸ்டைல் டிரஸ் டிசைனிங்
  • மனை அறிவியல், உணவு சேவை மேலாண்மை
  • உயிரியல், வேளாண் அறிவியல்
  • வணிகவியல், கணக்கு பதிவியல், டைப்போக்ராபி மற்றும் கணினி அறிவியல்
  • வணிகவியல், கணக்கு பதிவியல், ஆடிட்டிங் - பிராக்டிக்கல்.

No comments:

Post a Comment