Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, September 19, 2019

வரலாற்றில் இன்று 19.09.2019


செப்டம்பர் 19 (September 19) கிரிகோரியன் ஆண்டின் 262 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 263 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 103 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1356 – இங்கிலாந்து “போல்ட்டியேர்” என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரான்சை வென்றது.
1658 – யாழ்ப்பாணத்தில் ரோமன் கத்தோலிக்க மத குருமாரை மறைத்து வைத்திருப்பது மரணதண்டனைக்குரிய குற்றமாக டச்சு அரசால் அறிவிக்கப்பட்டது.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் மிசிசிப்பியில் இடம்பெற்ற போரில் கூட்டமைப்பினரத் தோற்கடித்தனர்.
1870 – பிரான்சுக்கும் புரூசியாவுக்கும் இடம்பெற்ற போரில் பாரிஸ் நகரைக் கைப்பற்றும் நிகழ்வு ஆரம்பமானது. பாரிஸ் 1871, ஜனவரி 28 இல் புருசியாவிடம் வீழ்ந்தது.
1881 – ஜூலை 2இல் சுடப்பட்டுப் படுகாயமடைந்த அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்ஃபீல்ட் இறந்தார்.
1893 – சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் உலக சமய மாநாட்டில் உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்.
1893 – நியூசிலாந்து பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதலாவது நாடானது.
1942 – மேற்கு உக்ரைனில் புரோடி என்ற இடத்தில் கிட்டத்தட்ட 2,500 யூதர்கள் நாசி வதைமுகாமுக்கு அனுப்பப்பட்டனர்.
1944 – பின்லாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.


1952 – ஐக்கிய அமெரிக்கா சார்லி சப்ளின் இங்கிலாந்து சென்றுவிட்டுத் அமெரிக்க திரும்புவதற்குத் தடை விதித்தது.
1957 – ஐக்கிய அமெரிக்கா நிலத்துக்கடியே தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை நடத்தியது.
1976 – தெற்கு துருக்கியில் போயிங் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 155 பேர் கொல்லப்பட்டனர்.
1983 – சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1985 – மெக்சிகோவில் இடம்பெற்ற 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தினால் குறைந்தது 9,000 பேர் கொல்லப்பட்டனர்.
1989 – நைஜர் நாட்டில் பிரெஞ்சு யூடிஏ விமானத்தில் குண்டு வெடித்ததனால் 171 பேர் கொல்லப்பட்டனர்.
1997 – அல்ஜீரியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் 53 கிராம மக்களைப் படுகொலை செய்தனர்.
2006 – தாய்லாந்தில் இராணுவப் புரட்சியில் இராணுவத் தளபதி சோந்தி பூன்யா ரத்கிலின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

பிறப்புக்கள்

1911 – வில்லியம் கோல்டிங், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய நாவலாசிரியர் (இ. 1993)
1965 – சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி வீராங்கனை

இறப்புகள்

1881 – ஜேம்ஸ் கார்ஃபீல்ட், ஐக்கிய அமெரிக்காவின் 20வது குடியரசுத் தலைவர் (பி. 1831)
1980 – கே. பி. சுந்தராம்பாள், தமிழிசை, நாடகக் கலைஞர் (பி. 1908)
2014 – உ. ஸ்ரீநிவாஸ், மேண்டலின் இசைக் கலைஞர் (பி. 1969)

சிறப்பு நாள்

சிலி – இராணுவத்தினர் நாள்
சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் – விடுதலை நாள் (1983)

No comments:

Post a Comment