Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, September 22, 2019

வரலாற்றில் இன்று 22.09.2019

செப்டம்பர் 22 (September 22) கிரிகோரியன் ஆண்டின் 265 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 266 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 100 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1499 – சுவிட்சர்லாந்து விடுதலை பெற்று தனி நாடாகியது.
1692 – ஐக்கிய அமெரிக்காவில் சூனியக்காரர்களின் கடைசித் தொகுதியினர் தூக்கிலிடப்பட்டனர்.
1711 – டஸ்கரோரா பழங்குடிகள் வட கரொலைனாவில் பாம்லிக்கோ ஆற்றுப் படுகையில் குடியேற்றவாசிகளைத் தாக்கி 130 பேரைக் கொன்றனர்.
1784 – அலாஸ்காவின் கோடியாக் என்ற இடத்தில் ரஷ்யா தனது குடியேற்றத்தை ஆரம்பித்தது.
1877 – யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் பத்திரிகையின் ஆசிரியராக தமிழறிஞர் அருளப்ப முதலியார் நியமிக்கப்பட்டார்.
1888 – நஷ்னல் ஜியோகிரபிக் மகசின் (National Geographic Magazine) முதலாவது இதழ் வெளிவந்தது.
1893 – அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தானுந்து முதன் முதலாகக் காட்சிப்படுத்தப்பட்டது.
1896 – பிரித்தானியாவின் அரச வம்சத்தில் அதிக காலம் ஆட்சியில் இருந்த பெருமையை விக்டோரியா மகாராணி பெற்றார்.
1908 – பல்கேரியா விடுதலையை அறிவித்தது.
1914 – ஜேர்மனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் இரவு 9:30 மணிக்கு சென்னைத் துறைமுகத்தையும் மற்றும் நகரப் பகுதிகளையும் குண்டுவீசித் தாக்கியது. மொத்தம் 130 குண்டுகளை அது வீசியது.
1934 – வேல்சில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 266 பேர் கொல்லப்பட்டனர்.
1941 – யூதர்களின் புத்தாண்டில் உக்ரேனின் வின்னிட்சியா நகரில் 6,000 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் முதல் நாட்களில் கொல்லப்பட்ட 24,000 யூதர்களில் உயிர் தப்பியோராவர்.


1944 – இரண்டாம் உலகப் போர்: ரஷ்ய இராணுவம் எஸ்தோனியாவின் தலைநகர் தாலின் நகரினுள் நுழைந்தனர்.
1955 – ஐக்கிய இராச்சியத்தில் ஐடிவி தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1960 – மாலிக் கூட்டமைப்பில் இருந்து செனெகல் விலகியதை அடுத்து சுடானியக் குடியரசு மாலி எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1965 – இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் காஷ்மீர் தொடர்பாக இடம்பெற்ற போர் ஐநாவின் போர் நிறுத்த அழைப்பை ஏற்று முடிவுக்கு வந்தது.
1970 – மலேசியாவின் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தனது பதவியை விட்டு விலகினார்.
1975 – ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் ஜெரால்ட் ஃபோர்ட் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.
1980 – ஈரான் – ஈராக் போர்: ஈராக் ஈரானை முற்றுகையிட்டது.
1993 – ஜோர்ஜியாவின் பயணிகள் விமானம் ஒன்று சுகுமி என்ற இடத்தில் தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 108 பேர் கொல்லப்பட்டனர்.
1995 – நாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலை,யாழ் நாகர்கோயில் பாடசாலை மீது 12:50 மணிக்கு இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுவீச்சில் 30 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
1997 – அல்ஜீரியாவில் 200 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
2006 – MSN தமிழ், ஹிந்தி பீட்டாவிற்கு விடைகொடுத்து இறுதிப் பதிப்பை ஆரம்பித்ததோடு, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பதிப்பை ஆரம்பித்தது.

பிறப்புகள்

1930 – பி.பி.ஸ்ரீநிவாஸ், பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகர், (இ. 2013)
1791 – மைக்கேல் பரடே, ஆங்கில அறிவியலாளர் (இ. 1867)

இறப்புகள்

1539 – குரு நானக் தேவ், சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவர் (பி. 1469)
2009 – எஸ். வரலட்சுமி, நடிகை, பாடகி (பி. 1927)
2009 – ஆர். பாலச்சந்திரன், பேராசிரியர், கவிஞர்

சிறப்பு நாள்

பல்கேரியா – விடுதலை நாள் (1908)
மாலி – விடுதலை நாள் (1960)
தானுந்து அற்ற நாள்

No comments:

Post a Comment