நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆசிரியர்களுக்கு ஈரோட்டில் சிறப்பு பயிற்சி

நீட், ஜேஇஇ உள்பட போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆசிரியர்களுக்கு 2 நாள் சிறப்பு பயிற்சி வகுப்புகள் ஈரோட்டில் நடத்தப்பட உள்ளன.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு:
நிகழ் கல்வியாண்டில் நீட், ஜேஇஇ போன்ற அனைத்து வகை போட்டித் தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார் செய்யும் வகையில் அரசு, அரசு உதவி பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
அதன்படி, மாவட்டந்தோறும் 10 பேர் வீதம் மாநிலம் முழுவதும் 320 முதுநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், ஈரோட்டில் வரும் 6, 7 தேதிகளில் நடத்தப்பட உள்ளன.


இந்த வகுப்புகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் தலா 2 ஆசிரியர்கள் வீதம் 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பயிற்சியில் பங்கேற்க உள்ள ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்ப வேண்டும். மேலும், கடந்த ஆண்டு பயிற்சியின்போது வழங்கப்பட்ட கையேட்டை உடன் எடுத்து வர வேண்டும் என்றும், போக்குவரத்து செலவுகளை பெற்றோர், ஆசிரியர் கழக நிதியில் இருந்து பெற்றுக் கொள்ளவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel