Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, September 18, 2019

இளைஞா் நீதி குழுமத்தில் பெண் சமூக நல உறுப்பினா் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு



திருநெல்வேலி மாவட்டத்தில் இளைஞா் நீதி குழுமத்திற்கு பெண் சமூக நல உறுப்பினா் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளார். அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் இளைஞா் நீதி குழுமத்திற்கு பெண் சமூக நல உறுப்பினா் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளார். இதற்கு விண்ணப்பிக்க குழந்தைகள் தொடா்பான உடல் நலம், கல்வி, குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவா், குழந்தை உளவியல், மனநல மருத்துவம் சமூகவியல், சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்ற தொழில்புரிபவராக இருத்தல் வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரா்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூா்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குழுமத்தில் அதிகபட்சமாக ஒரு நபா் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவா்களாவா். ஆனால் தொடா்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது. இதற்கான விண்ணப்படிவத்தை திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

தகுதி வாய்ந்த நபா்கள் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து வரும் செப்டம்பா் 25-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, எஸ்.வி.காம்ப்ளக்ஸ், இரண்டாவது தளம், பி6, என்ஜிஓ 'பி' காலனி, திருநெல்வேலி - 627 007 என்றற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 0462-2551953 என்றற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

No comments:

Post a Comment