Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, September 21, 2019

அடிப்படை விதிகள் அறிவோம் - ந.க.எண். / ஓ.மு.எண். / மூ.மு.எண். / நி.மு.எண். / ப.மு.எண். / தொ.மு.எண். / ப.வெ.எண். / நே.மு.க.எண். என்றால் என்ன?~விளக்கம்...


அரசு ஊழியர்களின் கடித எண்கள் விளக்கம்

அரசூழியர்களைப் பொறுத்தவரை, மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களென இரண்டு வகையினர் இருக்கிறார்கள்.

ஆகையால், இவ்விரண்டு வகையினருக்கும் கடிதவெண்கள் மாறுபடும். நம்மைப் பொறுத்தவரை மாநில அரசு ஊழியர்களின் கடித எண்கள் மிகமுக்கியமானவை என்பதால், அதுகுறித்து முதலில் தெரிந்து கொள்வது கட்டாயமாகும்.


ந.க எண் = நடப்புக் கணக்கு எண்
ஓ.மு. எண் = ஓராண்டு முடிவு எண்
மூ.மு எண் = மூன்றாண்டு முடிவு எண்
நி.மு. எண் = நிரந்தர முடிவு எண்
ப.மு. எண் = பத்தாண்டு முடிவு எண்
தொ.மு எண் = தொகுப்பு முடிவு எண்
ப.வெ எண் = பருவ வெளியீடு எண்
நே.மு.க எண் = நேர்முகக் கடித எண்


இதில் நடப்புக் கணக்கு எண் மட்டுமே அதிகப் பயன்பாட்டில் இருக்கும். நேர்முகக் கடிதம் என்பது, கீழ்மட்ட ஊழியருக்கு, மேல்மட்ட ஊழியர் எழுதும் கடிதம். அதாவது, நேரடியாகப் பேசியதற்குச் சமம் என்பதால், அதற்கான பதிலை விரைந்து சொல்லவேண்டும்.


இவ்வெண்களில் எதுவொன்றும் இல்லாமல் எந்தவொரு கடிதம் யாருக்கு வந்தாலும், தனிப்பட்ட முறையில் தங்களைப் பாதிக்கும் என்பதால், சட்டத்துக்குப் புறம்பாகத் தங்களின் ஊழியப்பதிவேட்டில் பதியாமல் அரசூழியர்கள் அனுப்பிய கடிதம் என்றே பொருள். இதுவே, அவ்வூழியர் தனது ஊழியத்தில் கடமை தவறியுள்ளார் என்பதை நிரூபிக்கப் போதுமானது

No comments:

Post a Comment