JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, September 20, 2019

இனி கூகுள் அசிஸ்டன்ட் அக்காகிட்ட தமிழில் பேசலாம்! சரியான நேரத்தில் தூள் கிளப்பிய கூகுள் நிறுவனம்.!

செல்போன் அழைப்புகளை ஏற்கவும் இந்த கூகுள் அசிஸ்டென்ட் வசதி உதவி செய்கிறது,Google also announced that users can now watch the news in Hindi on Assistant.


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி மொழி தினத்தை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில், "நாடு முழுவதும் ஒரே மொழி இருக்க வேண்டியது அவசியம். அதுவே உலகில் இந்தியாவின் அடையாளமாக இருக்க வேண்டும். ஒரு மொழி, மொத்த நாட்டையும் ஒற்றுமையாக வைக்க முடியும் என்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால்தான் முடியும்." என்று பதிவிட்டார்.

தமிழில் என்னுடன் பேசுங்கள்



இதற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கூகுள் நிறுவனம் தனது 'கூகிள் ஃபார் இந்தியா' ('Google for India') நிகழ்வில் கூகுள் அசிஸ்டென்ட் பயனர்களுக்கு ஒரு பெரிய புதுப்பிப்பை அறிவித்தது. பயனர்கள் இப்போது கூகுள் அசிஸ்டென்ட்-ல் தமிழ், இந்தி குஜராத், தெலுங்கு, உருது, பெங்காலி மற்றும் கன்னடம் போன்ற பல இந்திய மொழிகளுக்கும் கட்டளையை வழங்கலாம். கண்டிப்பாக இது சரியான சமயத்தில் வழங்கப்பட்ட அருமையான அம்சமாகும்.
இந்த புதிய வசதி அனைத்து மொழிகளிலும் வந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதாவது தமிழில் என்னுடன் பேசுங்கள் என்று கேட்பதன் மூலம் கூகுள் அசிஸ்டென்ட் வசதியை தமிழில் பேச வைக்கலாம்.
கேட்டகவும் முடியும்



பயனர்கள் இப்போது தமிழில் செய்திகளை கேட்கவேண்டும் என்றால், இந்த கூகுள் அசிஸ்டென்ட் வசதி மிகவும் அருமையாகஉதவு செய்யும். மேலும் தமிழிலும் கூகுள் செய்திகளை தெளிவாகப் பார்க்கவும் மற்றும் கேட்டகவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 26: ஒன்பிளஸ் டிவி மற்றும் ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
வோடபோன்-ஐடியா

செல்போன் அழைப்புகளை ஏற்கவும் இந்த கூகுள் அசிஸ்டென்ட் வசதி உதிவி செய்கிறது, அதாவது உங்களுக்கு வரும் நன்பர்களின் அழைப்புகளை ஏற்க கூகுள் அசிஸ்டென்ட் இடம் தமிழில் ஒரு கட்டளையிட்டால் போதும், உடனே அதை ஏற்க்கும். மேலும் கூகுள் நிறுவனம் கொண்டுவந்த சமீபத்திய அம்சத்தை வழங்க நிறுவனம் வோடபோன்-ஐடியாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது.


அமெரிக்காவை அலறவிடும் தமிழ் வம்சாவளி அதிபர் கிம்: அதிர வைக்கும் ஆதாரங்கள்.!
000-800-9191-000 என்ற எண்ணில் அழைக்கலாம்

லக்னோ மற்றும் கான்பூரில் தொலைபேசி அழைப்பு மூலம் கூகிள் உதவியாளரை சோதிக்கிறது. உதவியாளருடன் இணைக்க பயனர்கள் 000-800-9191-000 என்ற எண்ணில் அழைக்கலாம்.
Google Pay மூலம் பண அனுப்ப முயன்றவரிடம் ரூ.96,000 அபேஸ்! எப்படி தெரியுமா?
நிகழ்நேர மொழிபெயர்ப்பை வழங்க சமீபத்திய அம்சம் உதவுகிறது



கூகிளின் போலோ ஆப் தற்சமயம் மராத்தி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது மொழிகளிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூகிள் ஃபார் இந்தியா' நிகழ்வில் அறிவிக்கப்பட்ட மிகப்பெரிய அம்சம் மொழிபெயர்ப்பாளர் பயன்முறையாகும்.ஆங்கிலம் மற்றும் மற்ற மொழி பேசும் இரண்டு நபர்களிடையே நிகழ்நேர மொழிபெயர்ப்பை வழங்க சமீபத்திய அம்சம் உதவுகிறது.

No comments:

Post a Comment