விபத்தில் இறக்கும் பள்ளி மாணவர்களுக்கு நிவாரணம் (இந்த ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்) - பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்

விபத்துகளில் இறக்கும் மாணவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் கோரும் விண்ணப்பங்களுடன் உரிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் எதிர்பாராத விபத்துகளால் இறந்தாலோ அல்லது பலத்த காயம் ஏற்பட்டாலோ, அவர்களின் குடும்பத்துக்குப் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.


அதன்படி விபத்தில் மரணமடையும் மாணவர்களுக்கு ரூ.1 லட்சம், பலத்த காயமடையும் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம், சிறிய காயங்களுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் அளிக்கப்படும். இந்தக் காரணங்களுக்காக பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனுப்பும் கருத்துருகள் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பதால் மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது. எனவே,


பெற்றோர் பாதுகாவலரின் விண்ணப்பம்,
மாணவரின் சுய விவரம்,
தலைமையாசிரியரின் பரிந்துரைக் கடிதம்,
முதல் தகவல் அறிக்கை நகல்,
இறப்புச் சான்று, வாரிசுச் சான்று,
பெற்றோர், மாணவர்களின் ஆதார் எண்,
மருத்துவரின் சான்று,
மாவட்ட கல்வி அதிகாரி பரிந்துரைக் கடிதம்


ஆகிய ஆவணங்களை முறையாக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பெற்று முதன்மைக் கல்வி அதிகாரி அனுப்பி வைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

Categories