JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, September 3, 2019

வனக்காவலர் பணி தேர்வு தேதி மாற்றம்

தமிழகத்தில், வனக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான, 'ஆன்லைன்' தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில், 564 வனக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வில் பங்கேற்க, 1.67 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான தேர்வு, அக்டோபர், 5ல் துவங்கும் என, வனச்சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்து இருந்தது.

தற்போது, இந்த தேர்வு நடைமுறையில், சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதன்படி, அக்., 4, 5, 6ல், ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. ஒரு நாளைக்கு இரண்டு அமர்வுகள் வீதம், மூன்று நாட்களில், ஆறு அமர்வுகளாக தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை, வனச்சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment