Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, September 6, 2019

கோவை மாவட்ட ஆவின் நிறுவனத்தில் வேலை காத்திருக்கு!


கோவை மாவட்ட ஆவின் நிறுவனத்தில், காலியாக உள்ள 15 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
1. டெக்னீசியன் (பாய்லர்மேன்) - 01
2. டெக்னீசியன் (எலக்ட்ரீசியன்) - 06
3. கனரக வாகன ஓட்டி - 07
4. பிரைவேட் செக்ரட்ரி கிரேடு (III) - 01

மொத்த காலியிடங்கள் = 15





முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 03.09.2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.09.2019

வயது வரம்பு: (01.09.2019 அன்றுக்குள்)
குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பியவராகவும், பொதுப் பிரிவினர்க்கான அதிகபட்ச வயது வரம்பு 30 வயதுடையவராகவும், பி.சி / எம்.பி.சி பிரிவினராக இருந்தால் 32 வயதுடையவராகவும், எஸ்.சி / எஸ்.டி பிரிவினராக இருந்தால் 35 வயதுடையவராகவும் இருத்தல் வேண்டும்

ஊதியம்:
குறைந்தபட்சமாக, ரூ.19,500 முதல் அதிகபட்சமாக ரூ.65,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வித்தகுதி:
1. டெக்னீசியன் (பாய்லர்மேன்) என்ற பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன், அட்டன்டன்ட் கிரேடு II அல்லது கிரேடு III என்ற சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
2. டெக்னீசியன் (எலக்ட்ரீசியன்) என்ற பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐடிஐயில் டிரேடு ஆப் எலக்ட்ரீசியன் அல்லது டிப்ளமா (EEE) என்ற சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம்.


3. கனரக வாகன ஓட்டி (ஹெவி வெஹிகிள் டிரைவர்) என்ற பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன், கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமமும், குறைந்தபட்சமாக 3 வருடம் கனரக வாகனம் ஓட்டுவதற்கான முன் அனுபவமும் பெற்றிருத்தல் அவசியம்.
4. பிரைவேட் செக்ரட்ரி கிரேடு (III) என்ற பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்து, தட்டச்சு பயிற்சி (ஆங்கிலம் மற்றும் தமிழ்) பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
https://aavinmilk.com/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
The General Manager ,
The Coimbatore District Cooperative
Milk Producers' Union Limited,
Pachapalayam, Kalampalayam (Post),
Coimbatore - 641 010.





விண்ணப்பக் கட்டணம்: ரூ.250

தேர்வு முறை:
1. எழுத்துத் தேர்வு
2. வாய்மொழி தேர்வு
3. ஓட்டுநர் தேர்வு

மேலும், இது குறித்த முழுத் தகவல்களுக்கு https://aavinmilk.com/web/guest/employee-notification - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment