Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, September 20, 2019

மாணவர்களை வெளியே நிற்க வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்


அந்தியூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், ஆகியோர் கலந்து கொண்டு 1376 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 15 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

அப்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் இன்று கல்வி துறை உள்பட ஒவ்வொரு துறையிலும் பல்வேறு வியக்கத்தகு பணிகள் நடைபெற்று இந்தியாவே வியக்கும் வகையில் நடந்து வருகிறது.



தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் பள்ளிக்கு கட்டணம் செலுத்தவில்லை என அந்த மாணவியை வெளியே நிறுத்தி வைத்ததாக என் கவனத்துக்கு வந்தது.

உடனடியாக வெளியேற்றப்பட்ட மாணவியை கட்டணம் இல்லாமல் சேர்க்கப்பட்டு உள்ளது. அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தின் அடிப்படையில் அந்த மாணவி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இது போன்ற ஏதேனும் என் கவனத்துக்கு வருமேயானால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

No comments:

Post a Comment