Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, September 20, 2019

PGTRB 2019 - அதிக தூரத்தில் தேர்வு மையங்கள், தவிப்பில் தேர்வர்கள்!


அரசுப்பள்ளி முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு மையங்கள் அதிக துாரங்களில் அமைக்கப்பட்டுள்ளதால் தென்மாவட்ட தேர்வர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.


அரசுப்பள்ளிகளில் 2 ஆயிரம் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப செப்.27 முதல் 29 வரை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தேர்வு நடத்துகிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பத்தில் தேர்வு மையங்கள் குறித்து மூன்று விருப்ப இடங்கள் கேட்கப்பட்டன. முதல் தேர்வாக சொந்த மாவட்டம், அடுத்து அருகில் உள்ள மாவட்டங்களை பலர் தேர்வு செய்தனர். ஆனால் தேனி மாவட்டத்தை சேர்ந்த பலருக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.அங்கு செல்ல தேர்வர்களுக்கு அதிக செலவாகும். பெண்கள் துணைக்கு ஒருவரை அழைத்து செல்ல வேண்டும். இதனால் மன உளைச்சலில் தவிக்கின்றனர்.


இதுகுறித்து டி.ஆர்.பி., அலுவலகத்தில் தேர்வர்கள் கேட்டபோது, 'ஆன் லைன் தேர்வு என்பதால் சென்னை ஒட்டிய மாவட்டங்களில் உள்ள கல்லுாரிகளில்தான் அந்த வசதி உள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.தென்மாவட்ட தேர்வர்களுக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment