JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Saturday, October 19, 2019

ரூ. 31,852 சம்பளத்தில் மத்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு


Central Coalfileds Ltd. நிறுவனத்தில் காலியாக இருக்கும் 75 இளநிலை ஓவர்மேன் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

Junior Overman - 75 காலியிடங்கள்

கல்வித் தகுதி:

Junior Overmen வேலைக்கான தகுதிச் சான்றிதழ் பெற்றிருப்பதுடன் Gas Testing, First-Aid Testing ஆகியவற்றில் சான்றிதழ்களும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

10.11.2019 அன்றய தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது.

சம்பளம் :



ரூ. 31,852 சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு முறை :

எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.centralcoalfields.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://www.centralcoalfields.in/pdfs/updts/2019-2020/01_10_2019_ccl_recruitment_092019.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.11.2019