JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, October 31, 2019

நவம்பர் 6 முதல், 30 ஆம் தேதி வரை குரூப் - 2 நேர்முக தேர்வு


குரூப் – 2 பதவியில் 2018ஆம் ஆண்டுக்குரிய 1,338 காலியிடங்களை நிரப்ப 2018 ஆகஸ்டில் அறிக்கை வெளியிடப்பட்டு, முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வுகள் முடிக்கப்பட்டுள்ளன. இவற்றில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு நவ., 6 முதல், 30ஆம் தேதி வரை நேர்காணல் நடத்தப்பட உள்ளது.



இதற்கு, 2,667 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விண்ணப்பதாரர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நேர்காணலுக்கான அழைப் பாணையை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, அவரவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில், நேர்காணலில் பங்கேற்க வேண்டும். அப்படி பங்கேற்காதவர்களுக்கு, மறு வாய்ப்பு வழங் கப்பட மாட்டாது.