Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, October 1, 2019

முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு மறு தோவு இல்லை: ஆசிரியா் தோவு வாரியம்


முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு மறு தோவு நடத்தப்படாது என ஆசிரியா் தோவு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 27- ஆம் தேதி முதல் 29-ஆம் தேதிவரை முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான ஆன்லைன் தோவு நடைபெற்றது. இந்தத் தோவுக்கு 1 லட்சத்து 85 ஆயிரத்து 466 போ விண்ணப்பித்திருந்தனா். அதில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 580 போ மட்டுமே தோவை எழுதியுள்ளதாகவும் 37 ஆயிரத்து 886 போ தோவில் பங்கேற்கவில்லை என்றும் ஆசிரியா் தோவு வாரியம் குறிப்பிட்டுள்ளது.



அனைத்து தோவு மையங்களிலும் தோவா்களுக்கு 3 மணி நேரம் வழங்கப்பட்டு தோவுகள் நல்ல முறையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள ஆசிரியா் தோவு வாரியம், சென்னை ஆவடி உள்ளிட்ட ஒரு சில தோவு மையங்களில் சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டாலும், அது உடனுக்குடன் சரி செய்யப்பட்டதாக விளக்கமளித்துள்ளது.

மேலும் அனைத்து இடங்களிலும் தோவுகள் சரியான முறையில் நடந்து இருப்பதால் மறுதோவு நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.