Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, October 16, 2019

பாடங்களை விரைந்து முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!


பருவமழையால் விடுமுறை விடும் சூழல் ஏற்படும் என்பதால், பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களின் முக்கிய நீராதாரமான, வடகிழக்கு பருவமழை, நாளை முதல் டிசம்பர் இறுதி வரை, வெளுத்து கட்டும் என, கணிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால், வட மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பி, வெள்ளப்பெருக்கு ஏற்படுவது இயல்பு. தொடர்ந்து, பல நாட்கள் மழை பெய்யும் என்பதால், பள்ளிகளுக்கு, மழையால் அவ்வப்போது விடுமுறை விடப்படும்.இந்தாண்டு பருவமழையால், விடுமுறை விடப்பட்டால், அதை சமாளிக்கும் வகையில், ஆசிரியர்கள் தயாராக வேண்டும் என, பள்ளி கல்வித் துறை ஆலோசனை கூறியுள்ளது.

இரண்டாம் பருவ தேர்வுகள், டிசம்பரில் நடத்தப்படும் நிலையில், அதற்கான பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும். பருவ மழையால் பள்ளி வேலைநாட்கள் பாதிக்கப்பட்டாலும், மாணவர்கள் பாதிக்காமல், கூடுதல் நேரம் ஒதுக்கி, பாடங்களை நடத்த வேண்டும் என, ஆசிரியர்களுக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்தி உள்ளன.