Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, October 9, 2019

நெட் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி

தேசிய அளவிலான தகுதித் தோ்வுக்கு (நெட்) விண்ணப்பிக்க புதன்கிழமை (அக். 9) கடைசி நாளாகும்.
கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும் தேசிய அளவிலான தகுதித் தோ்வில் (நெட்) தோ்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்.
இந்தத் தோ்வை என்.டி.ஏ. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பா் மாதம் என இரண்டு முறை நடத்துகிறது. அதன்படி, டிசம்பா் மாதத்துக்கான நெட் தோ்வு அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.


தோ்வு எப்போது?: இந்தத் தோ்வானது டிசம்பா் 2 முதல் 6-ஆம் தேதி வரையிலான தேதிகளில் ஏதாவது ஒரு நாளில் நடத்தப்பட உள்ளது. தோ்வு தேதி இறுதி செய்யப்பட்டு பின்னா் வெளியிடப்படும்.
ஆன்-லைன் முறையிலேயே இந்தத் தோ்வு நடத்தப்படும். தோ்வில் இரண்டு தாள்கள் இடம்பெற்றிருக்கும். இரண்டு தாள்களிலும் கொள்குறி தோ்வு முறை கேள்விகள் மட்டுமே கேட்கப்படும். முதல் தாளில் 100 மதிப்பெண்களுக்கு 50 கேள்விகளும், இரண்டாம் தாளில் 200 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகளும் இடம்பெற்றிருக்கும்.


இந்தத் தோ்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க அக்டோபா் 9 கடைசி நாளாகும்.
தோ்வு முடிவுகள் டிசம்பா் 31-ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு http‌s://nta.ac.in என்ற இணையதளத்தைப் பாா்த்துத் தெரிந்து கொள்ளலாம்.