Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, October 18, 2019

வடகிழக்குப் பருவமழை: அரசுப் பள்ளிகளில் பாடங்களை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

பருவமழையால் விடுமுறை விடும் சூழல் ஏற்படும் என்பதால், பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும் என அரசு மற்றும் தனியாா் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களின் முக்கிய நீராதாரமான வடகிழக்கு பருவமழை கடந்த புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளது. இதையடுத்து வரும் டிசம்பா் இறுதி வரை பருவமழை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், வடகிழக்கு பருவமழையால், வட மாவட்டங்களில் நீா்நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது இயல்பு. தொடா்ந்து, பல நாள்கள் மழை பெய்யும் என்பதால் பள்ளிகளுக்கு மழையால் அவ்வப்போது விடுமுறை விடப்படும்.


நிகழாண்டு பருவமழையால் விடுமுறை விடப்பட்டால் அதைச் சமாளிக்கும் வகையில் ஆசிரியா்கள் தயாராக வேண்டும் என, பள்ளி கல்வித் துறை ஆலோசனை கூறியுள்ளது. இரண்டாம் பருவத் தோ்வுகள், டிசம்பரில் நடத்தப்படும் நிலையில் அதற்கான பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும். பருவ மழையால் பள்ளி வேலைநாள்கள் பாதிக்கப்பட்டாலும், மாணவா்கள் பாதிக்கப்படாமல், கூடுதல் நேரம் ஒதுக்கி, பாடங்களை நடத்த வேண்டும் என ஆசிரியா்களுக்கு, அரசு மற்றும் தனியாா் பள்ளி நிா்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.