Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, October 27, 2019

இலந்தை பழத்தின் மருத்துவ குணங்கள்


இலந்தை இலை தசை,நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும். வேர், பட்டை பசித் தூண்டியாகவும், பழம் சளி நீக்க, மலமிளக்கு, பசித்தீயை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது.



இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்த்துமா, கழுத்து நோய், கண் தெரிய, இரத்த அழுத்தத்தைக் குறைக்க, தலைவலி, மன உழைச்சலைப் போக்க, எந்த வலியையும் போக்கவும் வல்லது. இதை டீ யாக சைனா, கொரியா, வியட்னாம், ஐப்பான் ஆகிய நாடுகளில் பயன் படுத்துகிறார்கள். இதை ஊறுகாயாக மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஸ்சில் பயன் படுத்துகிறார்கள். தமிழ் நாட்டில் இதன் பழத்துடன் புளி, மிளகாய் வற்றல், உப்பு, வெல்லம் ஆகியவை சேர்த்து நன்கு இடித்து வெய்யிலில் காயவைத்து இலந்தை வடையாகப் பயன் படுத்துகிறார்கள்.