Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, October 27, 2019

ஊமத்தங்காயின் உன்னதமான நன்மைகள்


ஊமத்தை இலையை நல்லெண்ணெயில் வதக்கி ஒற்றமிட‌ கீல்வாயு குணமாகும்.தேள், பூரான், வண்டு கடியால் ஏற்படும் வீக்கத்திற்கு ஊமத்தை இலையை அரைத்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்துப் பிசைந்து பற்றுப் போடலாம்.வீக்கம் கட்டிகள் கரைய, ஊமத்தை இலையை அரைத்து சம அளவு அரிசி மாவு சேர்த்து ஒரு விரல் கனத்திற்கு பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப் போட வேண்டும்.பிஞ்சு ஊமத்தங்காயை உமிழ் நீர் சிறிதளவு சேர்த்து, அரைத்து, தலையில் தேய்க்க வேண்டும்.



இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் வரை செய்து வர, தலைப்பேன்கள் குறையும். முடி வளரத் தொடங்கும். இது ஒரு பாரம்பரிய வைத்தியமாகும்.கரு ஊமத்தை மலைப் பகுதிகளிலுள்ள புறம் போக்கு நிலங்கள், பாழ் நிலங்களில் அரிதாகப் காணப்படுவதாகும். மிக அரிதாகச் சமவெளிப் பகுதியிலும் வளர்கின்றது.கரு ஊமத்தை பூக்கள் ஊதா நிறமானவை. பழங்கள் நீலம் படர்ந்தவை. குறு முட்களுடன் கூடியவை. இது இதன் மருத்துவக் குணங்களுக்காகப் பயிர் செய்யப்படுகின்றது.