JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, October 31, 2019

பொதுத்தேர்வு பணி ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் தேர்வுத்துறை அறிவுறுத்தல்


பொதுத்தேர்வு பணி ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் தேர்வுத்துறை அறிவுறுத்தல்  சென்னை  பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்களின் விவரங்களை அனுப்பி வைக்க முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.



தமிழக பள்ளி கல்வியின் பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு களுக்கு மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்வுத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி பொதுத் தேர்வெழுதும் மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபட உள்ள தலைமை யாசிரியர்கள், அனைத்து வகை ஆசிரியர்கள், மற்றும் இதர அலு வலக பணியாளர்களின் விவரங் களை இறுதி செய்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் விரைவாக அனுப்பி வைக்க வேண்டும்.



மேலும், அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளி வாரியாக ஆசிரியர்கள் விவரப்பட்டியலை குறிப்பிட வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து விடைத்தாள் அச்சிடுதல் மற்றும் வினாத்தாள் தயாரிப்பு போன்ற அடுத்தகட்ட பணிகளுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.