Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, October 15, 2019

My Attendance ( AEBAS ) - பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவு செய்யும் ஆசிரியர்கள் தங்களது வருகைப்பதிவு முழு விவரத்தையும் தெரிந்து கொள்ள வேண்டுமா?




பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவு செய்யும் ஆசிரியர்கள் தங்களது வருகைப்பதிவு முழு விவரத்தையும் தெரிந்து கொள்ள பயன்பட உதவும் மொபைல் ஆப்பினை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது மற்றும் பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.


முதலில் Play store ல் My Attendance என Type செய்து மேற்கண்ட அப்ளிகேஷனை Download செய்து கொள்ளவும்.அதனை Open செய்து Tamilnadu தேர்வு செய்து Next கொடுக்கவும் பின்பு School education ஐ Select செய்யவும்.பின்பு Employee தேர்வு செய்து Proceed கொடுக்கவும்


மேற்கண்டவாறு வரும் Page ல் Attendance ID என்ற இடத்தில் உங்களது ஆதார் எண்ணில் கடைசி 8 எண்களை Type செய்யவும்.

அதன் கீழே வரும் Code ஐ அதில் உள்ள மாதிரி Type செய்து General Login OTP ஐ Click செய்தவுடன் உங்கள் மொபைல் எண்ணிக்கு ஒரு OTP வரும்.

பிறகு இந்த Page ல் Left side ன் மேலே தெரியும் மூன்று கோட்டை டச் செய்தவுடன்



மூன்று கோட்டை தொட்டால் மேற்கண்ட Box தெரியும் அதில் Login பகுதியில் User name ல் கடைசி 8 இலக்க ஆதார் எண்ணும் , Password ல் உங்களுக்கு வந்த Otp யும் பதிவிட்டு sign me in கொடுக்கவும்.


மீண்டும் New Password ஐ உருவாக்கி கொள்ளச் சொல்லும் ( குறைந்த பட்சம் 8 இலக்கம்) புதிய Password ஐ உருவாக்கி கொள்ளவும்.

மீண்டும் Login ஐ Click செய்து User name, new Password, captcha code ஐ Type செய்து login கொடுத்தவுடன் கீழ்கண்ட Page open ஆகும்.


இந்த Page லும் மூன்று கோட்டை தொட்டால் Open ஆகும் Box ல்

# update Information ( உங்களை பற்றிய தகவல் புகைப்படத்துடன் காணப்படும்)

# Attendance Register ( நீங்கள் இதுவரை பதிவு செய்த உங்களது வருகை நேரவாரியாக காணப்படும்)

# Leave ( நீங்கள் எடுத்த விடுமுறை மற்றும் விடுப்பு தேவையெனில் விண்ணப்பிக்கலாம் )

# Tour ( உங்களது சுற்றுலா பற்றிய விவரங்கள் ) அனைத்தையும் Open செய்து தெரிந்து வைத்துக்கொள்ளவும்.

User name மற்றும் Password நினைவில் வைத்துக் கொள்ளவும்.மீண்டும் ஆப் உள்ளே நுழையும் போது தேவைப்படும்.

குறிப்பு :

தற்போது வரை இந்த மொபைல் ஆப் மூலம் உங்களது தகவல்களை தெரிந்து கொள்ள மட்டுமே .உங்களது அலுவலகத்தில் தெரிவித்தபின் முறைப்படி பயன்படுத்தவும்.