Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, November 13, 2019

10-வது தேர்ச்சியா? அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு!


இந்திய அஞ்சல் துறையின் காலியாக உள்ள 3650 'கிராமின் டக் சேவாக்' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய அஞ்சல் துறை

பணியிடம் : மகாராஷ்டிரா அஞ்சல் வட்டம்

மொத்த காலிப் பணியிடம் : 3650




பணிகள் :
BRANCH POSTMASTER (BPM)
ASSISTANT BRANCH POSTMASTER (ABPM)
DAK SEVAK

கல்வித் தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் உள்ளூர் மொழித்திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 60 நாட்கள் கால அடிப்படையிலான கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.11.2019 தேதியின்படி 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை : தகுதிப் பட்டியலின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பி நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.




விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு - ரூ.100
மற்ற பிரிவினர்களுக்குக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தும் முறை : கட்டணத்தை வங்கிகளின் பண பரிவர்த்தனை அட்டைகளைப் பயன்படுத்தி ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை : https://indiapost.gov.in?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH அல்லது http://appost.in/gdsonline?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.




இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும். file:///C:/Users/greynium/Desktop/SABA%20CI/Nov%2012/Maharashtra-14.pdf

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 30.11.2019 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.