Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, November 12, 2019

வரலாற்றில் இன்று 12.11.2019

நவம்பர் 12 கிரிகோரியன் ஆண்டின் 316 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 317 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 49 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

764 – திபெத்தியப் படைகள் சீனாவின் டாங் மக்களின் தலைநகரான சங்கான் நகரை 15 நாட்கள் கைப்பற்றி வைத்திருந்தன.
1833 – அலபாமாவில் லியோனீட் விண்கற்கள் வீழ்ந்தன.
1893 – அன்றைய பிரித்தானிய இந்தியாவுக்கும் (தற்போதைய பாகிஸ்தான்) ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான எல்லைக்கோடு கீறப்படுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
1905 – நோர்வே மக்கள் வாக்கெடுப்பு மூலம் குடியாட்சியை விட மன்னராட்சியே சிறந்தது எனத் தெரிவித்தனர்.
1906 – பாரிசில் அல்பேர்ட்டோ சாண்டோஸ்-டியூமொண்ட் வானூர்தி ஒன்றைப் பறக்கவிட்டார்.
1918 – ஆஸ்திரியா குடியரசாகியது.
1927 – மகாத்மா காந்தி இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார்.
1927 – லியோன் ட்ரொட்ஸ்கி சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஜோசப் ஸ்டாலின் சோவியத்தின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றினார்.
1938 – மடகஸ்காரை யூதர்களின் தாயகமாக மாற்றும் நாசி ஜேர்மனியின் திட்டத்தை “ஹேர்மன் கோரிங்” என்பவர் வெளிக் கொணர்ந்தார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: செவஸ்தபோல் நகரில் சோவியத் போர்க் கப்பல் “செர்வோனா உக்ரயீனா” மூழ்கடிக்கப்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் அவ்ரோ போர் விமானம் ஜேர்மனியின் போர்க்கப்பல் ஒன்றை நோர்வேயில் மூழ்கடித்தது.




1948 – டோக்கியோவில் பன்னாட்டு போர்க் குற்றவாளிகளின் நீதிமன்றம் ஒன்று ஏழு ஜப்பானிய இராணுவ அதிகாரிகளுக்கு 2ம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக மரண தண்டனை விதித்தது.
1969 – மை லாய் படுகொலைகள் தொடர்பான உண்மைகளை ஊடகவியலாளர் சீமோர் ஹேர்ஷ் வெளியிட்டார்.
1980 – நாசாவின் விண்கப்பல் வொயேஜர் 1 சனிக் கோளுக்கு மிக அருகில் சென்று அதன் வளையங்களின் படங்களை பூமிக்கு அனுப்பியது.
1981 – கொலம்பியா விண்ணோடம் தனது இரண்டாவது விண்வெளிப் பயணத்தை இரண்டு வீரர்களுடன் ஆரம்பித்தது.
1982 – சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரராக யூரி அந்திரோப்பொவ் தெரிவு செய்யப்பட்டார்.
1982 – போலந்தின் சொலிடாரிட்டி தொழிற்சங்கத் தலைவர் லேக் வலேசா பதினொரு மாத சிறைத்தண்டனைக்குப் பின்பு விடுதலையானார்.
1989 – தென்னிலங்கையின் உலப்பனையில் தனது தோட்ட வீட்டில் மறைந்திருந்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் றோகண விஜேவீர கைதாகி மறுநாள் கொல்லப்பட்டார்.
1990 – இணைய வலை பற்றிய தனது முதலாவது திட்டத்தை ரிம் பேர்னேர்ஸ்-லீ அறிவித்தார்.
1991 – கிழக்குத் திமோர், டிலியில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் இந்தோனீசிய இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் உயிரிழந்தனர்.
1994 – இலங்கையின் 5வது அரசுத் தலைவராக சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டார்.
1996 – சவுதி அரேபியாவின் போயிங் விமானமும் கசக்ஸ்தானின் இல்யூஷின் விமானமும் புது டில்லிக்கு அருகில் நடுவானில் மோதிக் கொண்டதில் 349 பேர் கொல்லப்பட்டனர்.
1998 – கியோட்டோ பிரகடனத்தில் ஆல் கோர் கையெழுத்திட்டார்.
2001 – நியூயோர்க் நகரில் டொமினிக்கன் குடியரசு நோக்கிச் சென்ற அமெரிக்க விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் விபத்துக்குள்ளாகியதில் விமானத்தில் சென்ற 260 பேரும் தரையில் இருந்த 5 பேரும் கொல்லப்பட்டனர்.
2001 – ஆப்கானிஸ்தானின் காபூல் நகரை விட்டு தலிபான் படைகள் முற்றாக விலகினர்.
2006 – முன்னாள் சோவியத் குடியரசான தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பை நடத்தியது.




பிறப்புக்கள்

1817 – பஹாவுல்லா, பஹாய் சமயத்தைத் தோற்றுவித்தவர் (இ. 1892)
1866 – சுன் இ சியன், சீனாவின் புரட்சித் தலைவர் (இ. 1925)
1896 – சலீம் அலி, இந்திய பறவையியல் வல்லுநர் (இ. 1987)
1920 – வல்லிக்கண்ணன், தமிழ் எழுத்தாளர் (இ. 2006)

இறப்புகள்

2001 – சத்குரு சிவாய சுப்ரமணியசுவாமி, இந்து அமெரிக்க ஆன்மிகவாதி (பி. 1927)

சிறப்பு நாள்

பஹாய் நம்பிக்கை – புனித நாள் (பஹாவுல்லா பிறந்த நாள்)
உலக நுரையீரல் அழற்சி நாள் – ஐக்கிய நாடுகள்