Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, November 17, 2019

வரலாற்றில் இன்று 17.11.2019

நவம்பர் 17 (கிரிகோரியன் ஆண்டின் 321 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 322 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 44 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1292 – ஜோன் பலியல் ஸ்கொட்லாந்தின் அரசன் ஆனான்.
1511 – ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகியன பிரான்சுக்கு எதிராக அணி திரண்டன.
1558 – இங்கிலாந்தின் முதலாம் மேரி இறக்க அவரது ஒன்றுவிட்ட சகோதரி முதலாம் எலிசபெத் அரசியானார்.
1796 – பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை இத்தாலியில் ஆர்க்கோல் என்ற இடத்தில் தோற்கடித்தன.
1820 – கப்டன் நத்தானியல் பால்மர் அண்டார்ட்டிக்காவை அடைந்த முதலாவது அமெரிக்கர் ஆனார். பால்மர் குடாநாடுக்கு இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டது.
1831 – எக்குவாடோர் மற்றும் வெனிசுவேலா ஆகியன பாரிய கொலம்பியாவில் இருந்து பிரிந்தன.
1869 – எகிப்தில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது.
1873 – பெஸ்ட், பூடா, மற்றும் ஓபுடா ஆகிய நகரங்கள் இணைக்கப்பட்ட புடாபெஸ்ட் நகரம் ஹங்கேரியின் தலைநகராக்கப்பட்டது.
1878 – இத்தாலியின் முதலாம் உம்பேர்ட்டோ மீதான முதலாவது கொலை முயற்சி இடம்பெற்றது.
1903 – ரஷ்யாவின் சமூக சனநாயக தொழிற் கட்சி போல்ஷெவிக் (பெரும்பான்மை), மேன்ஷெவிக் (சிறுபான்மை) என இரண்டாகப் பிளவுண்டது.
1918 – யாழ்ப்பாணத்தில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். நிவாரண நிதியம் அமைக்கப்பட்டது.




1922 – முன்னாள் ஓட்டோமான் பேரரசின் சுல்தான் ஆறாம் மெஹ்மெட் இத்தாலிக்கு நாடு கடத்தப்பட்டான்.
1933 – ஐக்கிய அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தை அங்கீகரித்தது.
1939 – செக் நாட்டில் நாசி எதிப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து 9 மாணவர்கள் தூக்கிலிடப்பட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.
1950 – 14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ தனது 15வது வயதில் திபெத்தின் அரசுத் தலைவரானார்.
1968 – அலெக்சாண்ட்ரொஸ் பனகோலிஸ் என்பவருக்கு கிரேக்க சர்வாதிகாரி ஜோர்ஜ் பப்படொபவுலொசைக் கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
1970 – வியட்நாம் போர்: மை லாய் படுகொலைகள் தொடர்பாக அமெரிக்காவின் லெப்டினண்ட் வில்லியம் கலி விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
1970 – சோவியத்தின் லூனாக்கொட் 1 சந்திரனில் தரையிறங்கியது. தொலைவில் இருந்து இயக்கக்கூடிய ரோபோ ஒன்று வேறோர் உலகத்துக்கு அனுப்பப்பட்டது இதுவே முதற் தடவை ஆகும்.
1970 – டக்லஸ் ஏங்கெல்பேர்ட் முதலாவது கணினி mouse க்கான காப்புரிமம் பெற்றார்.
1989 – பனிப்போர்: செக்கோசிலவாக்கியாவில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் கலகம் அடக்கும் காவற்துறையினரால் நசுக்கப்பட்டது. ஆனாலும் இந்நிகழ்வு பின்னர் டிசம்பர் 29 இல் கம்யூனிச அரசைக் கவிழ்க்க ஆரம்பமாக அமைந்தது.
2003 – ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர் கலிபோர்னியாவின் ஆளுநரானார்.




பிறப்புக்கள்

1904 – இசாமு நொகுச்சி சிற்பக் கலைஞரும், கட்டடக் கலைஞரும் (இ. 1988)
1909 – சி. இலக்குவனார், தமிழறிஞர் (இ. 1973)
1920 – ஜெமினி கணேசன் தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 2005)
1927 – கமில் சுவெலபில், செக் நாட்டுத் தமிழறிஞர் (இ. 2009)
1930 – பிரேம்ஜி ஞானசுந்தரம் முற்போக்கு எழுத்தாளர், பத்திரிகையாளர் (இ. 2014)

இறப்புகள்

1558 – இங்கிலாந்தின் அரசி முதலாம் மேரி (பி. 1516)
1796 – உருசியாவின் இரண்டாம் கத்தரீன், உருசிய அரசி (பி. 1729)
1858 – ராபர்ட் ஓவன், வேல்சு நாட்டு செயல்திறனாளர் (பி. 1771)
1917 – ஆகுஸ்ட் ரொடான், பிரெஞ்சு சிற்பி (பி. 1840)
1928 – லாலா லஜபத் ராய், இந்திய எழுத்தாளர், அரசியல்வாதி (பி. 1865)
1973 – மிரா அல்பாசா, பிரெஞ்சு-இந்திய ஆன்மிகத் தலைவர் (பி. 1878)
2000 – இலூயீ நீல், பிரெஞ்சு இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1904)
2013 – டோரிஸ் லெசிங், ஆங்கிலேய எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1919)
2013 – திடீர் கன்னையா, நகைச்சுவை நடிகர்

சிறப்பு நாள்

அனைத்துலக மாணவர் நாள்