Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, November 22, 2019

ரூ.21 ஆயிரம் சம்பளத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தில் ஸ்டோர் ஏஜெண்ட் வேலை



ஏர் இந்தியா நிறுவனத்தின் தில்லியில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 57 ஸ்டோர் ஏஜெண்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.




பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Store Agents

காலியிடங்கள்: 57

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.10.2019 தேதியின்படி பொது பிரிவினர் 21 - 33க்குள்ளும், ஓபிசி பிரிவினர் 36க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.




சம்பளம்: மாதம் ரூ.21,000

விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.12.2019

மேலும் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், விண்ணப்பக் கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.