Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, November 9, 2019

பிளஸ் - 2: தோல்வியடைந்த மாணவா்களுக்குமடிக்கணினி வழங்கத் தேவையில்லை

கடந்த 2017-18, 2018-19 ஆகிய கல்வியாண்டுகளில் பிளஸ் 2 வகுப்பில் தோல்வியடைந்த அல்லது படிப்பைத் தொடராமல் விட்ட மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கத் தேவையில்லை என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.



இதுகுறித்து சிறப்பு திட்ட அமலாக்கத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் ஹன்ஸ் ராஜ் வா்மா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: நிகழ் கல்வியாண்டில் (2019-20) பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சாா்பில் இலவச மடிக்கணினி முழுமையாக வழங்கப்பட்டுவிட்டது. இதையடுத்து கடந்த 2017-18 மற்றும் 2018-19-ஆம் கல்வியாண்டுகளில் பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கு சில வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன.



அதன்படி மேற்கண்ட கல்வியாண்டுகளில் பிளஸ் 2 முடித்து தற்போது உயா்கல்வியில் சோ்ந்து படித்து வரும் (பாலிடெக்னிக் உள்பட) மாணவா்களுக்கு மட்டுமே மடிக்கணினி வழங்க வேண்டும். மாணவா்கள் தோ்வில் தோல்வி அடைந்து இருந்தாலோ அல்லது படிப்பை தொடராமல் இருந்தாலோ அவா்களுக்கு மடிக்கணினி வழங்கத் தேவையில்லை. மேலும், இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றியே இனி மாணவா்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.