Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, November 25, 2019

கவுரவ விரிவுரையாளர் பணிக்கு போட்டித்தேர்வு: 574 பேர் பங்கேற்பு


புதுச்சேரி:பள்ளி கல்வித்துறையில் நேற்று நடந்த கவுரவ விரிவுரையாளர் பணிக்கான போட்டி தேர்வில் 574 பேர் பங்கேற்றனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கவுரவ விரிவுரையாளர் பணிக்கு தகுதி அடிப்படையில் நிரப்புவதற்கான போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டது.இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்கள் 685 பேருக்கு, போட்டி தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளம் வழியாக பெற ஏற்பாடு செய்யப்பட்டது.



போட்டி தேர்வு நேற்று பாரதிதாசன் மகளிர்கல்லுாரியில் காலை 10:00 மணி முதல் பகல் 12:00 மணி வரைநடந்தது. தேர்வில் 574 பேர் மட்டுமே பங்கேற்றனர்.தேர்விற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். தேர்வுக்கான உத்தேச விடை குறிப்புகள் பள்ளி கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.schooledn.py.gov.in என்ற வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.



இது குறித்து ஆட்சேபனை இருந்தால், வரும் 25ம் தேதி மாலை6:00 மணி வரையில் தங்களது ஆட்சேபனைகளை, guestlecturer2019@gmail.com என்ற இமெயில் முகவரியிலோ அல்லது கல்வித்துறை இயக்குனரகம் முதல் தளத்தில் உள்ள இணை இயக்குநர் நிர்வாக பிரிவிலோ தெரிவிக்கலாம் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.