Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, November 15, 2019

அசைவ விருந்து, ஆடல்,பாடல் கொண்டாட்டங்களுடன் விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்ட குழந்தைகள் தினவிழா பார்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் மதிய உணவாக அசைவ விருந்து(பிரியாணி) பரிமாறப்பட்டு, ஆடல்,பாடல் கொண்டாட்டங்களுடன் நடைபெற்ற குழந்தைகள் தினவிழா பெற்றோர்களை மகிழ்சியில் ஆழ்த்தியது

குழந்தைகளை மகிழ்விப்பதற்காக கொண்டாடப்படும் குழந்தைகள் தினம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளான நவ, 14 ம் தேதி கொண்டாடப்படுகிறது ஆனால் உலகம் முழுவதும் நவ, 20 தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது




உலகிலேயே அதிக குழந்தைகள் கொண்ட நாடுகளில் முக்கிய நாடாக இந்தியா விளங்குகிறது. குந்தைகள் மீது நேருவும், அவர் மீது குழந்தைகளும் அளவுகடந்த அன்பு வைத்திருந்ததால் தான் அவரது பிறந்த நாளை நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.

இநிலையில் விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் கோ. ஜெயந்தி தலைமை வகித்தார் பெற்றோர் ஆசிரியர் கழத்தலைவர் ஜெ. ஆர். அய்யப்பன் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சியுடன் தொடங்கிய விழாவில் பேச்சு, கட்டுரை,ஓவிய போட்டிகள் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது




விழாவின் முக்கிய நிகழ்வாக மதிய விருந்தாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு பரிமாறப்பட்ட அசைவ உணவு(பிரியாணி) விருந்தினர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. முன்னதாக மாணவிகள் சார்பில் நேருவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியதை செலுத்தப்பட்டது

இதில் விராலிமலை வட்டாட்சியர் சதிஸ்சரவணகுமார்,வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், வங்கிமேலாளர் மனோஜ்(ஐபி), மங்களவித்யா(எஸ்பிஐ), தொழிலதிபர், ஆர்.கே, சிவசாமி, ஆர். பி. ராமசந்திரன், ஆர். எம். முரளிதரன், பள்ளிக்கூடத்தான் சந்துரு, சூர்யாசங்கர், சிவா, செந்தில்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்




மேலும் விழாவில் ஏ.கே. நகை குழுமம் முகமது காலித், ஒய்வு பெற்ற ஆசிரியர் பாலசுப்பிரமணியன்,கல்குடி சரவணன், அம்மன் சேகர், முன்னாள் கவுன்சிலர் செந்தில், ரன்மணி, உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.