JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, November 15, 2019

பணி நியமனத்திற்கு மட்டுமே இட ஒதுக்கீடு பொருந்தும்: சென்னை உயர்நீதிமன்றம்





தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, பணி மூப்பில் இடஒதுக்கீடு வழங்குவது சட்டவிரோதமானது என்று தமிழக அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், தமிழக அரசு ஊழியர்களின் பணி நியமனத்திற்கு மட்டுமே இட ஒதுக்கீடு பொருந்தும் என்று தெரிவித்த நீதிமன்றம், 2016இல் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீடு அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் 3 சட்டப்பிரிவுகளை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளது.