Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, November 6, 2019

பி.எட்., சிறப்பு படிப்பு பல்கலை அறிவிப்பு



தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் பதிவாளர் தியாகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில், 2020ம் ஆண்டுக்கான, பி.எட்., சிறப்பு கல்வி பட்டப் படிப்புக்கான, &'ஆன்லைன்&' விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க கையேடு வெளியிடப்பட்டுள்ளது.



இந்த படிப்பில் சேர விரும்பும் பட்டதாரிகள், வரும், 18ம் தேதி வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பல்கலைக்கழக மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் அங்கீகாரம் மற்றும் இந்திய மறுவாழ்வு கழகத்தின் அங்கீகாரத்துடன், இந்த படிப்பு நடத்தப்படுகிறது. இந்த படிப்பு, பி.எட்., பொதுப்படிப்புக்கு இணையானது.பி.எட்., சிறப்பு கல்வி படிப்புக்கு, பல்கலை மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற பல்கலைகளில், ஏதாவது, ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.விண்ணப்ப விபரங்களை, www.tnou.ac.in என்ற இணையதளத்திலும், 044 - 2430 6600 என்ற தொலைபேசி எண்ணிலும் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.