Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, November 6, 2019

பிரீமியம் கட்டத் தவறி காலாவதியான எல்ஐசி பாலிசிகளை மீண்டும் புதுப்பிக்க வாய்ப்பு

பிரீமியம் கட்டத் தவறி காலா வதியான பாலிசிகளை பாலிசிதாரர் கள் மீண்டும் புதுப்பித்துக் கொள் ளலாம் என எல்ஐசி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏ) கடந்த 2013-ம் ஆண்டு பிறப்பித்த ஓர் உத்தரவின்படி, 2014 ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு எடுத்த பாலிசிக்கான பிரீமியம் தொகை தொடர்ந்து 2 ஆண்டுகளாக செலுத்தப்படாமல் இருந்தால், அந்தப் பாலிசி மீண்டும் புதுப்பிக்க முடியாமல், காலவாதியான பாலிசியாக மாறி விடும் என அறிவிக்கப்பட்டது.



பொதுமக்கள் ஆயுள் காப்பீடு எடுப்பது என்பது ஒரு விவேகமான முடிவு. ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, அவர்களால் தொடர்ந்து பிரீமியம் கட்ட முடியாமல், பாலிசி காலாவதியாகி விடுகிறது.

இதனால், காலாவதியான பாலிசிகளை புதுப்பிப்பதற்கு பதிலாக, பொதுமக்கள் மீண்டும் புதிதாக பாலிசிகளை எடுக்கின்ற னர்.

இந்நிலையில், பாலிசிதாரர் களுக்கு தொடர்ந்து ஆயுள் காப் பீட்டு சேவை வழங்குவதற்காக, காலாவதியான பாலிசிகளை மீண்டும் புதுப்பிக்க வாய்ப்பு வழங் கக் கோரி எல்ஐசி நிறுவனம், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணை யத்தை அணுகியது.



இதையடுத்து, 2014 ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு எடுக்கப் பட்ட பங்குசந்தையுடன் தொடர்பில்லாத பாலிசிகளை முதல் செலுத்தப் படாத பிரீமியம் தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு உள்ளும், பங்குசந்தையுடன் தொடர்புடைய பாலிசிகளை 3 ஆண்டுகளுக்கு உள்ளும் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. எனவே, பாலிசிதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது காலாவதியான பாலிசிகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம்.